Wednesday, November 30, 2011

A year away from Office


 I realize,  a year has rolled after I separated from official life 'for a while'. In sports they say, 'hanging the boot or glove'- what is it for official life - 'shut down' or 'log off' . In fact, it is worth analyzing this cliché for other professions too - will take it up later.

Strolling back, the retirement thought process evolved over a period of time, compounded by so many desires and finally the last step was compelled by circumstances. There were  genuine well wishers , who have been with me for decades really appreciated and encouraged me to press ahead , while there were those who supported me with the thoughts of the days ahead, after stepping down.

As already posted elsewhere in this blog, I spent enough time, many mornings  on this and decided that if I could evaluate satisfactorily - the need, repercussions and the path  ahead, in that order, then I should be driven in the best possible direction. I consulted many, browsed extensively and consolidated finally my POA which had the wholehearted approval of the immediate victims- my family !

As in life, some of our acts were instantaneous , though the paths to the decisions were elaborate and consume much time. But, the act of communicating to my immediate superiors were derived on a cloudy September evening. Surprisingly, I was greatly relieved after shooting off that mail, not because of a decision arrived at, more so I don't need to think about it anymore and could focus on other matters of my interest.

Three months flew by and after a moving farewell, I suddenly found myself alone at home with an empty home and a head full of thoughts. I glanced through the TO DO spreadsheet and found it difficult to focus on them, as I was yet to be mentally relieved from my desk. Whatever it be  I wanted to be clear that no new habits inculcated, normal personal routines and preferences to remain undisturbed and as for new acts, I was trying to recall my ambitions & aspirations for years- it could be as trivial as walking down the Marina on a cold morning before daybreak to extensive India tour.

Looking back, I realize that I have fairly met my ambitions, aspirations and my own expectations. The first few months were spent in sitting with my immediate elder brother, who required attention - one of the major reasons for my quest for extra hours personally for me . I could also make some trips down South, chill out for a few days at Kodai, make walking a habit and could spend lots of time on my literary thirst. I would have atleast read about a dozen books in English and Tamil and my blog posts increased like the Chennai temperature in summer. Most importantly, I could spend a lot of time with my family and lend my hand at domestic chores too- a hitherto unknown terrain ! When my health beeped for service, the normally third dimension of office- pending jobs- leave etc., was blissfully absent. I could also tick off an enormous backlog of postponed jobs from carpentry to realignment of finances. For some time,  I was working at a feverish pitch to clear my activities list, but soon realized that this list will be perennially augmented and there is no point in trying to clear it off - one of the big lessons.

But then, what are the other lessons of an year away from office.
o   One can keep oneself busy- there are umpteen avenues.
o   Keep planning for the day on the eve so that you are well organized and it also helps to beat the ennui.
o   Internet is a treasure and years back what one had to do by walking miles, could now be done by sitting at home-  read, get information, write, purchase etc.,
o   Early morning becomes more enjoyable with reading than on the laptop.

I am happy I did not :
o   feel bored on any day, the biggest fear of people around rather than me.
o   imbibe the siesta -  the most feared habit; could be overcome, if desired.
o   look for any job over the year, a definite sign of a wrong decision. Though I am looking for more activities suitable to my thoughts and likes

 Happy that I could listen periodically to music and FM news from the dusted  music system,  go for occasional matinee shows in theatres ( after many many years) read & experiment with  books of my choice by keeping my daughter's library membership active , browse extensively, regularize health related activities, make more posts in my blog, extend my hand for some differently abled students, move around Mylapore streets and enjoy the Margazhi better. Well, almost all the short term goals have been reached and let me now shoot for the longer ones.

Life still holds a lot of promises and I have my own expectations from it!. 2012, here I come !!

Friday, November 18, 2011

சும்மா - தமிழில்

சூப்பர் காலை. ராத்திரி  முழுக்க மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டி இன்னும் விடாப்பிடியா பெஞ்சிண்டு இருக்கு.  நவம்பர், டிசம்பர் மாசம்னாலே எனக்கு ரொம்ப பிடிக்கும் - ஏனென்றால் வெயில் இல்லை - கார்த்தாலே இதமான குளிர் - மார்கழி வந்தால் கேட்கவே வேண்டாம், ஏகப்பட்ட பொழுதுபோக்குகள். சென்னையில் எனக்குப் பிடிச்ச மாசங்களே நவம்பர்  முதல் பிப்ரவரி. தாராளமாகச் சுற்றலாம் - வியர்வை இல்லை, நிறைய  பண்டிகைகள் . 

கார்த்தாலே அஞ்சு மணிக்கு எழுந்து , நல்ல மழையின் பின்னணியில் தியானம் பண்ணி, மெல்லிய பாட்டோடு புஸ்தகங்கள் படிக்கறதுல இருக்கிற சுகம் இருக்கே, அது தனி தான். என்ன வாக்கிங் போக முடியல்லை. அதுக்கென்ன சாயங்காலம் போனாப்  போச்சு. 

 சரி, ரொம்ப நேரமா காத்துண்டு இருந்த காபி வந்துடுச்சு (புது டிகாஷன் )  . அப்புறம் பார்க்கலாம்
சும்மா, நக்கீரன் தமிழ் இல்லாமல் பேசும் தமிழில் எழுதலா மேன்னு நினைச்சேன் - அதுதான் இந்த கிறுக்கல் 

பரவாயில்லை. தமிழில் நல்ல டைப் பண்ண வருது. 
ஒரு நவம்பர் மழை மிகுந்த காலை - 18-Nov-2011

Monday, November 14, 2011

அண்ணா நூற்றாண்டு நூலகம்


பல நாட்களாக நினைத்துக் கொண்டிருந்த அண்ணா நூற்றாண்டு நூலகம் போயிருந்தேன்.  நல்ல கார் பார்க் வசதியுடன்  மிக பிரமாண்டமான் தோற்றத்தை உடைய அருமையான முகப்பு வரவேற்றது. சென்னை மாநகரத்துக்குள் இவ்வளவு பெரிய விஸ்தாரமான கட்டடம் இருப்பதே அதிசயம்- அதிலும் இவ்வளவு வசதியா என்ற மலைப்பை அடக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தேன். வாசலில் பாதுகாப்பு பலமாக இருக்கும் என்று நினைத்த எனக்கு சிறிது ஏமாற்றமே. ஒரு கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு பந்தாவே இல்லாத அதிசயத்தை வியந்து உள்ளே நுழைந்தால் கொஞ்ஞம் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டால்போல் இருந்தது

வாசலில் ஒரே ஒரு பேப்பரில் எந்தெந்த மாடியில் என்ன இருக்கிறது என்று  இருந்த தூணைச்சுற்றி கொஞ்ஞம் கூட்டம். முதல் மாடியில் பத்திரிகைகள் பக்கம் நல்ல கூட்டம். ஆனால் எல்லோருமே அமைதியாக உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நானும் எல்லாப் பத்திரிகைகளையும் படித்தேன். நான் கேள்வியே பட்டிறாத பல நல்ல பத்திரிகைளையும் (பார்க்க) படிக்க முடிந்தது. படிப்பதற்க்கு நல்ல அருமையான சூழ்நிலை. அந்த சுத்தம், அமைதி, ஒரு வாசனை எல்லாம் எனக்கு ஏனோ ஆஸ்த்ரேலியாவின் சிட்னியை ஞாபகப்படுத்தியது

மேல் மாடியில் சென்றால் பொது அறிவு, கம்ப்யூடர் என்று மலை மலையாய் புத்தகங்கள்

ஏதோ பத்திரிகையில் படித்தேன் - எட்டாம் மாடியில் ஈbooks இருக்குன்னு. விஜாரிச்சால் இப்பத்தான் ஏற்ப்பாடு நடப்பதாகச் சொன்னார்கள். ஆனால் இவர்களுடய அக்கறயைப் பார்த்தால் சீக்கிரமே வந்து விடும்னு தோண்றது.

வயிறு பசித்ததால் திரும்ப வேண்டியிருந்தது- ஆனால் மனசு நிரம்பி இருந்தது. கண்டிப்பாக மீண்டும் வருவேன். நிறையப் படிக்க வேண்டியது உள்ளது. அத்துடன் இந்தச் சூழ்நிலையை அனுபவிக்க வேணும்னா சீக்கிரம் வரணுமோங்ற உள்ளுணர்வும் வருத்ததுடன் உந்தியது.  

இவ்வளவு ப்ரம்மாண்டம், இந்த சுத்தம், இந்த அமைதி, இந்த பணிவு - சென்னைதானா என்று ப்ரமிக்க வைக்கிறது. சென்னைக்கே பெருமை - யார் சேர்த்தால் தான் என்ன?