பல நாட்களாக நினைத்துக் கொண்டிருந்த அண்ணா நூற்றாண்டு நூலகம் போயிருந்தேன். நல்ல கார் பார்க் வசதியுடன் மிக பிரமாண்டமான் தோற்றத்தை உடைய அருமையான முகப்பு வரவேற்றது. சென்னை மாநகரத்துக்குள் இவ்வளவு பெரிய விஸ்தாரமான கட்டடம் இருப்பதே அதிசயம்- அதிலும் இவ்வளவு வசதியா என்ற மலைப்பை அடக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தேன். வாசலில் பாதுகாப்பு பலமாக இருக்கும் என்று நினைத்த எனக்கு சிறிது ஏமாற்றமே. ஒரு கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு பந்தாவே இல்லாத அதிசயத்தை வியந்து உள்ளே நுழைந்தால் கொஞ்ஞம் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டால்போல் இருந்தது.
வாசலில் ஒரே ஒரு பேப்பரில் எந்தெந்த மாடியில் என்ன இருக்கிறது என்று இருந்த தூணைச்சுற்றி கொஞ்ஞம் கூட்டம். முதல் மாடியில் பத்திரிகைகள் பக்கம் நல்ல கூட்டம். ஆனால் எல்லோருமே அமைதியாக உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நானும் எல்லாப் பத்திரிகைகளையும் படித்தேன். நான் கேள்வியே பட்டிறாத பல நல்ல பத்திரிகைளையும் (பார்க்க) படிக்க முடிந்தது. படிப்பதற்க்கு நல்ல அருமையான சூழ்நிலை. அந்த சுத்தம், அமைதி, ஒரு வாசனை எல்லாம் எனக்கு ஏனோ ஆஸ்த்ரேலியாவின் சிட்னியை ஞாபகப்படுத்தியது.
மேல் மாடியில் சென்றால் பொது அறிவு, கம்ப்யூடர் என்று மலை மலையாய் புத்தகங்கள்.
ஏதோ பத்திரிகையில் படித்தேன் - எட்டாம் மாடியில் ஈbooks இருக்குன்னு. விஜாரிச்சால் இப்பத்தான் ஏற்ப்பாடு நடப்பதாகச் சொன்னார்கள். ஆனால் இவர்களுடய அக்கறயைப் பார்த்தால் சீக்கிரமே வந்து விடும்னு தோண்றது.
வயிறு பசித்ததால் திரும்ப வேண்டியிருந்தது- ஆனால் மனசு நிரம்பி இருந்தது. கண்டிப்பாக மீண்டும் வருவேன். நிறையப் படிக்க வேண்டியது உள்ளது. அத்துடன் இந்தச் சூழ்நிலையை அனுபவிக்க வேணும்னா சீக்கிரம் வரணுமோங்ற உள்ளுணர்வும் வருத்ததுடன் உந்தியது.
இவ்வளவு ப்ரம்மாண்டம், இந்த சுத்தம், இந்த அமைதி, இந்த பணிவு - சென்னைதானா என்று ப்ரமிக்க வைக்கிறது. சென்னைக்கே பெருமை - யார் சேர்த்தால் தான் என்ன?
On 14-Nov-2011, T.M Natarajan wrote " I take the privilege to share your blog to my friends/distribution list..
ReplyDeleteKapali and I used work together, he is a Banker cum IT professional.
Recently he retired and now enjoying his free time by writing in his blog..
I am pleasantly surprised to know his writing skills in English/Tamil on variety of topics
Hope you too enjoy !"
On 14-Nov-2011, Vernkatraman Rajendran wrote "Your write-up about the Anna Library could not have come at a more appropriate time....."
ReplyDelete