சூப்பர் காலை. ராத்திரி முழுக்க மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டி இன்னும் விடாப்பிடியா பெஞ்சிண்டு இருக்கு. நவம்பர், டிசம்பர் மாசம்னாலே எனக்கு ரொம்ப பிடிக்கும் - ஏனென்றால் வெயில் இல்லை - கார்த்தாலே இதமான குளிர் - மார்கழி வந்தால் கேட்கவே வேண்டாம், ஏகப்பட்ட பொழுதுபோக்குகள். சென்னையில் எனக்குப் பிடிச்ச மாசங்களே நவம்பர் முதல் பிப்ரவரி. தாராளமாகச் சுற்றலாம் - வியர்வை இல்லை, நிறைய பண்டிகைகள் .
கார்த்தாலே அஞ்சு மணிக்கு எழுந்து , நல்ல மழையின் பின்னணியில் தியானம் பண்ணி, மெல்லிய பாட்டோடு புஸ்தகங்கள் படிக்கறதுல இருக்கிற சுகம் இருக்கே, அது தனி தான். என்ன வாக்கிங் போக முடியல்லை. அதுக்கென்ன சாயங்காலம் போனாப் போச்சு.
சரி, ரொம்ப நேரமா காத்துண்டு இருந்த காபி வந்துடுச்சு (புது டிகாஷன் ) . அப்புறம் பார்க்கலாம்.
சும்மா, நக்கீரன் தமிழ் இல்லாமல் பேசும் தமிழில் எழுதலா மேன்னு நினைச்சேன் - அதுதான் இந்த கிறுக்கல்
பரவாயில்லை. தமிழில் நல்ல டைப் பண்ண வருது.
ஒரு நவம்பர் மழை மிகுந்த காலை - 18-Nov-2011
No comments:
Post a Comment