Friday, December 23, 2011

நான் ஒரு முட்டாளுங்க


ஏதோ - லோக்பாலோ, டினோபாலோ வரப்போர்துன்னு சொல்றாங்க. விளையாட்டாக ஆரம்பித்த இது,  விஸ்வ ரூபம் எடுத்து சில சமயம் யார் கட்டுப்பாட்டுக்கும் இல்லாமல், ஒரு பெரிய விருட்ஷமாக வளர்ந்து கொண்டிருக்கு. 

இந்த நேரத்தில், ஒரு சாதாரண மனிதனாக, சில அசட்டுத்தனமான கேள்விகள் தோன்றத்தான் செய்கின்றன. இவங்க ஆளும் கட்சிய பயமுறுத்துவதாக சொல்ராங்க. அவங்களோ இவங்கதான் ஆட்சியை நடத்த முடியாம பண்றதாச் சொல்ராங்க. இந்த அரசியலெல்லாம் நமக்குப் புரியாதுங்க - நம்ப தான் அசடாச்சே !

இந்த மசோதா வந்தப்புறம், நம்மளோட தினசரி அக்கப்போரான இதெல்லாம் என்னெவாகும்? தெரிந்தாச் சொல்லுங்களேன்:

1. இனிமே ரேஷன் கார்டு புதுசா வாங்கர்த்துக்கோ, இல்ல முகவரி மாத்தறதுக்கோ, அதிக காசு குடுக்க வேணாமா?

2. வாரிசு தாரர் சர்டிஃபிகேட்டுக்கு நடயா நடக்க வேணாமா - தானா வீட்டுக்கே வந்துடுமா?

3. அவசரத்துக்கு பதிவில்லாத டிக்ககெட் எடுத்து ரயில்ல ஏறிட்டா, டீ டீ ஈ ஒண்ணும் எதிர்பார்க்க மாட்டாரா?

4. வீடு பத்திரம் பதிவு பண்றது சுலபமாயுடுமா?

5. லாரியெல்லாம் இனிமே சிக்னலுக்கு சிக்னல் பயமில்லாமல் போக முடியுமா?

6. அவசரத்துக்கு சிக்னலை கவனிக்காமல் வண்டியில போயிட்டா, நியாயமான அபராதம் மட்டும் கட்டினால் போதுமா ?

7. வீட்டு வரியும் கட்டி கார்டும் ஒண்ணுமே செலவில்லாம வாங்க முடியுமா?

8. இனிமே காசு கொடுக்காமலேயே, ட்ரைவிங்க் லைசென்சு வாங்கமுடியுமா?

9. அரசு ஆஸ்பத்ரி வாசலில் இனிமேல் கை நீட்ட மாட்டாங்களா ?

10. எல்லா பய புள்ளங்களுக்கும் இனிமே இங்ஜினீயரிக் காலேஜில சீட் கிடைக்குமா?

தெரிஞ்சாசொல்லுங்களேன்-இந்த மர மண்டைக்கு !

1 comment:

  1. On 24-Dec-2011, T.M Natarajan wrote " Posted by my friend.. This is a common man's point of view !"

    ReplyDelete