Saturday, July 17, 2010

ரசித்த தமிழ்க் கவிதைகள்

ஆண்டு 1982 என்று நினைக்கிறேன் . என் சஹாக்களுக்கெல்லாம் தமிழ்க் கவிதை மேல் ஒரு ஈர்ப்பு வந்தது. என் நண்பன் ராஜா கல்யாணத்துக்கு மதுரை சென்ற பொழுது , இலக்கியப் பண்ணை என்ற புத்தகக் கடையில் நல்ல மேய்ச்சல். அந்த நாட்களிலிருந்து நான் ரசித்த சில துணுக்குகள், கவிதைகள் இதோ:


  1. விழிகள் நட்சத்திரங்களை வருடினாலும் , விரல்கள் என்னவோ ஜன்னல் கம்பிகளோடுதான் - மு. மேத்தா
  2. பொருட்பாலுக்காக காமத்துப்பாலை விற்கிறேன். அதற்க்காக அறத்துப்பால் ஏன் அழுது புலம்புகிறது.
  3. கருப்பு வளையல் கையுடன் குனிந்து வளைந்து பெருக்கிப்போனாள். வாசல் சுத்தமாச்சு, மனசு குப்பையாச்சு.
  4. கனவுகளை நான் வெறுக்கிறேன் அவை எத்தனை அழகாக இருந்தாலும் . நிழல்களின் ஒப்பந்தங்களை விட நிஜங்களின் போராட்டமே எனக்குப் பிடிக்கும்.
  5. காலந்தோறும் காத்துக்கிடந்தாலும் முசுக்கட்டை பட்டாகிறது . கனகாம்பரமும் டிசம்பர் பூக்களும் என்னவாகும் - சக்திகனல்
  6. என்னை நீ புரிந்து கொள்ளவில்லையென்றால் , வேறு யார் புரிந்து கொள்ளக் கூடும்? என்னை நீ புரிந்து கொள்ளவில்லையென்றால் , வேறு யார் புரிந்து கொண்டுதான் என்ன? - மீரா
  7. என் இதயத் தோட்டத்தில் ரோஜாக்களை பயிரிட்டேன் . அறுவடை செய்ய உன்னை அழைத்தேன் . அரிவாளோடு நீ வந்த பிறகுதான் என் தவறு எனக்குப் புரிந்தது - மு. மேத்தா
  8. ஆயிரம் கனவுகள் காண்கிறேன் ... அனந்த கோடி கற்பனைகளை வளர்த்துக் கொள்கிறேன் .. இவையெல்லாம் நடக்கிற காரியமா? சாத்தியப் படுமா? ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ என்றேன் . நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம் என்றார்- மஹா கவி பாரதியார்.
  9.  பிறப்பில் வருவது யாதெனக் கேட்டேன் - பிறந்து பார் என இறைவன் பணித்தான்  .  இறப்பில் வருவது யாதெனக் கேட்டேன் - இறந்து பார் என இறைவன் பணித்தான். அனுபவித்தே அறிவது யாதெனில், ஆண்டவனே நீ ஏன் எனக்கேட்டேன். ஆண்டவன் சற்றே அருகினில் வந்து அனுபவம் என்பதே நான் தான் என்றான் - பாலகுமாரன்
இன்னும் எழுத ஆசை - வ(ள) ரும்

2 comments:

  1. On 17-July-2010, venkrajen@yahoo.com wrote "Your canvas is simply superb. I had always been thinking of putting one such thing some blog.... I could not do. congrats that you did it"

    ReplyDelete
  2. பிறப்பில் வருவது யாதெனக் கேட்டேன் - பிறந்து பார் என இறைவன் பணித்தான் . இறப்பில் வருவது யாதெனக் கேட்டேன் - இறந்து பார் என இறைவன் பணித்தான். அனுபவித்தே அறிவது யாதெனில், ஆண்டவனே நீ ஏன் எனக்கேட்டேன். ஆண்டவன் சற்றே அருகினில் வந்து அனுபவம் என்பதே நான் தான் என்றான் -

    பாலகுமாரன் அல்ல கண்ணதாசன்

    ReplyDelete