Friday, August 5, 2011

தெய்வத்தின் குரல்

 I keep on my table some books handy such as Frozen Thoughts, Unposted letters, Robin Sharma, தெய்வத்தின் குரல் etc., and I choose anyone randomly according to my mood. I happened to read some pages from  தெய்வத்தின் குரல் yesterday and the results were amazing. The words were so simple and  gave lots of comfort :

வெளியில் இருப்பது நம் வசத்தில் இருப்பதல்ல. அது வந்தாலும் வரும், போனாலும் போகும்.

மனுஷ்யன் புறத்தில்  ஆனந்தத்தைத் தேடிக்கொண்டு போவதற்குக் காரணம், அவன் உள்ளுக்குள் தானே ஆனந்த ஸ்வரூபமாக இருப்பது தான்.

அடர்ந்த மரத்தின் கிளைகள் ஆடுகிறபோது இடுக்கு வழியாகக் கொஞ்சம் வெளிச்சம் வந்து பாய்ந்துவிட்டு, அடுத்த நிமிஷமே நிழல் வந்து மூடிக்கொள்வது போலத்தான், உலகத்தின் துன்பத்துக்கு நடுவில் கொஞ்சம் கொஞ்சம் சுகம் தலையை எட்டிப் பார்த்து விட்டு ஓடிவிடுகிறது.

துக்கம் நம் உடன் பிறப்பு . நம் பூர்வ கர்மாவின் பயனாக இந்தத் துக்கங்களுக்கு நாம் முன்னமேயே விதை போட்டிருக்கிரோம். இதிலிருந்து தப்ப வழியில்லை.

கிணற்று ஜலத்துக்குள் நீர் நிரம்பிய குடத்தை இழுக்கும் போது கனம் தெரிவதில்லை. ஆனால், தண்ணீர் மட்டத்துக்கு மேலே குடம் வந்தவுடன் கனக்க ஆரம்பித்து விடுகிறது

எளிதில் புரட்ட முடியாத பெரிய மரங்களை வெள்ளத்துக்கு அடியாகத்தான் புரட்டி இழுப்பது வழக்கம்.

அதே மாதிரி, நம் துக்கங்களையெல்லாம் ஞானமாகிற தண்ணீரில் அமுக்கி விட வேண்டும். அப்போதும் துக்க விஷயங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் ஜலத்துக்குள் இழுக்கிற குடம் மாதிரி அப்போது துக்கம் பரம லேசாகிவிடும்.
Amazing to realize how good a companion , can a book be?

No comments:

Post a Comment