Sunday, December 26, 2010

மார்கழித் திங்கள்

ஒவ்வொரு வருடமும்,  மார்கழி வருவதற்கு சில நாட்கள்  முன்னாடியே எனக்கு உள்ளூர ஒரு ஜுரம் வரும் - அது தான் எதிர்பார்ப்பு .  பல வருஷமா இந்த மாதத்தை பார்த்துப் பார்த்து, பழகி விட்டது.

ஸ்கூல் படிக்கும் போதே விடிகாலை நான்கு மணி  சுமாருக்கு எழுந்திருக்கு முன்னமேயே , பல சப்தங்கள் கேட்கும்.  பக்கத்து கோவிலில் இருந்து திருப்பாவை , தெருவில் செல்லும் பஜனை- தூக்கம் வராது. கொஞ்ச நாள் கழித்து இவை இல்லேன்னா தூக்கம் வரலை.

அம்மா உந்துதலில் , ஒரு நாள் நானும் போய் ஒரு பாட்டு பாடினேன் - இன்னும் மறக்கவில்லை அந்தப் பாட்டை- "அம்பா உன்னை நம்பினேன் ..." 

கிழக்கு மாட வீதி வீட்டை விட்டு போன பின்பும் ஒவ்வொரு வருடமும் பஜனைக்கு  வருவேன். அபீஸ் போக ஆரம்பித்த உடன், சனி, ஞாயிறு தவறாமல்  பஜனைக்கு வருவேன். பல முறை வயசான அம்மாவை காரில் கூட்டிண்டு வந்தப்போ, வாயார வாழ்த்தினாள் - இப்பொழுதுதான் அர்த்தம் புரிகிறது. 

இந்த வருஷம் ஆபீஸ் அவசரம்  இல்லாமல் , நிம்மதியாக பல பாட்டுக்கள் கேட்டேன்.  என்ன ஒரு கமிட்மென்ட் இந்த பஜனை கோழ்டிகளுக்கு   - பாபநாசம் சிவன், அண்ணாஜி ராவ் ... கொட்டும் மழையிலும் நாலு மாட வீதியிலும் அருமையாகப் பாடினார்கள்.

வைகுண்ட ஏகாதேசி அன்று "பார்த்தசாரதி திருவல்லிக்கேணியில் ..." - கேட்க குடுத்து வைக்கணும். இந்த கோழ்டிக்கு குடை பிடித்த சந்தோசம் , அந்த மார்கழிக் குளிரிலும் இனித்தது. 

சில பாடல்கள் ஞாபகத்துக்கு வந்தது " என்ன தவம் செய்தனை" , " எந்தரோ மகானு ..".

இப்பத்தான் புரிகிறது , ஏன் பலர் அமெரிக்காவிலேர்ந்து   மார்கழியில்  சென்னைக்கு  ஓடி வரான்னு- காண்டீன்  மட்டும் இல்லை , அவாள்ளாம் வேறே எதோ ருசியையும் ரசிக்கறாள்

No comments:

Post a Comment