Wednesday, February 8, 2012

குருவி


ஒரு காலத்தில் சில அரிசி மணிகளை முற்றத்தில் போட்டு , குருவிகள் அதை கொத்தி தின்பதை வேடிக்கை காட்டியே குழந்தைகளுக்கு தாய்மார்கள் சோறூட்டுவார்கள். குருவி என்றாலே ஞாபகத்துக்கு வருவது, பாரதி தான்இப்பல்லாம் , குருவிகளையே பார்க்க முடிவதில்லை . சுற்றுச் சூழ்நிலை என்கிறார்கள். சிலர் செல் போனுக்காக போடப்பட்ட டவரிலிருந்து வரும் கதிர்  வீச்சால் என்கிறார்கள். மொத்தத்தில் அவைகளைக் காணோம்.


சமீபத்தில் குருவிகளுக்கு புதிய விளக்கம் கொடுக்கிறார்கள். ஒரு இடத்திலிருந்து இன்னொருஇடத்துக்கு தேவைப்பட்டவற்றை கொண்டு செல்வது. கொஞ்ச வருடங்களுக்கு முன்னால், இந்தியாவிலிருந்து அண்மையில் உள்ள சில வெளிநாடுகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்பவர்களையும் இப்படித்தான் அழைத்தார்கள்.

நான் பேச வந்த குருவி இனங்கள் வேறு! தினமும் விடிகாலையில் வாக்கிங் போகும்போது பல வகைப்பட்டவர்களைப் பார்க்கிறேன். சிலர் பிள்ளை, பெண்களை கார் ஓட்ட கற்றுக் கொடுக்கும் இடத்துக்கு கூட்டி வருவார்கள். சிலர் அவசரமாக பிள்ளைகளை கல்லூரி பஸ்சுக்கு முன் சர் என்று கொண்டு வந்து இறக்குவார்கள். சில தாய்மார்கள், பிள்ளைகள் கிரிக்கேட் மட்டை சகிதமாக விளையாட்டு மைதானம் நோக்கி பயணித்துக் கொண்டிருப்பார்கள். புண்ணிய தினங்களில் சாஸ்த்ரிகள் பறந்து கொண்டிருப்பர்கள். இதன் நடுவில் பேப்பர் போடுபவர்கள் , லைப்ரரி புத்தகம் போடும் பையன்கள் - எல்லோரும் ஏதோ ஒரு வேலையாக, ஒரு குறிக்கோளுடன் பறந்து, பறந்து மக்களையோ, சாமான்களையோ இடம் இடம் விட்டு இடம் பெயர்க்கிறார்கள்கவலையோடும் கடமையோடும் பறக்கும் இவர்களும்  குருவிகளை ஞாபகப் படுத்துகிறார்கள் ! 

No comments:

Post a Comment