Thursday, January 13, 2011

2011 சென்னை புத்தகக் காட்சி

சில வருஷங்கள் கழித்து இன்று 34வது சென்னை  புத்தகக் காட்சிக்குப்  போயிருந்தேன். மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. வேணுமுன்னே லீவு நாள் தவிர்த்துப் போனேன் , ஆனாலும் நிறையப் பேரைப் பார்த்தேன்.- சுஜாதா, பாலகுமாரன், பாரதியார், கண்ணதாசன் என்று  பார்க்க பார்க்க மனசு பூரிச்சிப் போச்சு. பழைய ஞாபகங்கள் ஓடி வந்தன. 

எனக்குத்  தெரிந்து ஆறாவது book fare லருந்து  போய்க்கொண்டு  இருக்கேன். அப்பல்லாம் அண்ணா சாலை Arts College மைதானத்தில நடக்கும். ரெண்டு தடவை  போவோம். முதல்ல எல்லா புஸ்தகத்தையும்  ஒரு நோட்டம் பார்க்க , அப்புறம் புத்தகம் வாங்க - ஒரு திருவிழா போல இருக்கும்.

அதெல்லாம் நினைவு வந்தது. ஆனால் இப்ப காட்சி ரொம்ப  தேறி விட்டது  . எக்கச்சக்க stalls. அவ்ளோ புஸ்தகத்தைப பார்த்ததுடன் மூச்சுத் திணறியது. சுஜாதாவின் எல்லாப் புஸ்தகத்தையும் படிச்சுட்டேன்னு நினைச்சேன். இன்னிக்குத் தான் தெரிந்தது இன்னும் நிறைய இருக்குன்னு.  மனோரமா year புக் பார்த்தவுடன் ஆசைவந்தது - எதற்கு இனிமேல் என்று தோன்றவில்லை.   மறுபடியும் ஒரு ஸ்கூலுக்குப் போற உணர்வு வந்தது.  என்ன சந்தோசம்- யார் சொன்னா பொழுது  போகலைன்னு. நாட்டுல எவ்ளவோ இருக்கு படிக்கறதுக்கு.

நண்பன் சரவண கார்த்திகேயனின் , விருது  வாங்கிய ' சந்திராயன்' புத்தகத்தைத தேடிய பொழுது,  ஸ்டால் 274 ல, அது இல்லை என்ற பொழுது ஏமாற்றமாய் இருந்தது. ஒரு வளரும்  எழுத்தாளனை ஆதரிக்க முடியலயேன்னு.

சர்வ தேசத் தரத்துக்கு புத்தகங்கள் இருக்கு. கார் பார்க்கும் வெகு விசாலம். கொஞ்சம் இயற்கை உபாதைகள் பகுதி இன்னும் சுத்தமாக இருக்கலாம். BAPASI  கவனிப்பார்களா?

1 comment:

  1. என்னுடைய ச‌ந்திரயான் ஸ்டால் எண் F13ல் கிடைக்கிறது. பரத்தை கூற்று தான் நீங்கள் தேடிய 274ல் கிடைக்கிறது..
    http://www.writercsk.com/2010/12/2011.html

    ReplyDelete