ஒரு காலத்தில் டிசம்பர் மாசம் கடைசி வாரங்கள் நெருங்க நெருங்க ஒரு பர பரப்பு, ஒரு எதிர்பார்ப்பு. Friends வீட்டில் உட்கார்ந்து , நடு நிசி வரைக்கும் , உள்ள ஒரே Doordharshan சானலை, வேறு வழியில்லாமல் பார்த்து, புது வருடங்களை வரவேற்றோம்.
ஒரு வருடம் பெசன்ட் நகர் நண்பன் வீடு, ஜெயந்தியில் ரஜினி படம். திரும்பி வரும் பொழுது பார்த்த சாலை விபத்து- இன்னும் பசுமையாக நினைவில்.
ஒரு தடவை மரீனா பீச்சில் , நடு நிசி சமோசா.
இன்னும் அருகாமையில் flat நண்பர்களுடன் கொண்டாட்டம் - occupy பண்ணிய முதல் வருடம்.
கொஞ்ச வருடங்களாக வீட்டில் - மனைவி , மகளுடன். இந்த வருடம், பெண் தூங்கிவிட்டாள்- நானும் மனைவியும் - பால்கனி வழியே பார்த்த பொழுது- ஒரே சத்தம்- பட்டாசு , வேகமான பைக்குகள், விடலைப் பசங்களின் கூச்சல் ... கொண்டாட்டங்கள் மாறவே இல்லை.
மறுநாள் காலை -
பேப்பரில் சென்னையின் முதல் கொலை பற்றிய செய்தி.
டீவீயில் புதிய scam பற்றிய பரபரப்பு செய்தி.
வெங்காயம் விலை கிலோ அறுபது ரூபாய்க்கு சரிந்து, கூடிய விரைவில் மேலும் குறையும் என்று முதல்வரோ பிரதமரோ அறிவிப்பு !
புதிய சாமியாரின் புதிய லீலைகள்.
தங்கம் விலை இன்னும் ஏறும் என்று ஒரு டை கட்டிய ஆசாமி சிரிக்காமல் சொல்லிக் கொண்டிருந்தார்.
ரோட்டில் ஒரு பிச்சைக்காரக் குழந்தை - வெடித்த பட்டாசுகளையும், பலூனையும் பொறுக்கிக் கொண்டிருந்தது.
- நாடும் மாறவில்லை . அடுத்த புத்தாண்டு சந்திப்போம் - Happy New Year

No comments:
Post a Comment