Saturday, February 5, 2011

கைக்கடக்கமான தமிழ்க் கதைகள்

விகடன் பதிப்பகம், 108 ஒரு நிமிடக் கதைகள் என்று ஒரு புத்தகம் பார்த்தேன். ஒவ்வொரு கதையும் ஒரு சின்னப்  பக்கம் தாண்டாது. ஆனால் ஒவ்வொன்றும் ஒரு முத்து. சின்னக் கதைக்குள் பெரிய செய்தி தெரிந்தது. இந்தப் புத்தகத்தை ஒரு பஸ் அல்லது ரயில் பயணத்தில் படித்து முடித்து விடலாம். மடித்து pant பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம்.  நன்றாக அனுபவிக்க முடிந்தது. கிடைத்தால் படித்துப் பாருங்களேன் !  ஏனோ சுஜாதா சொன்னது ஞாபகத்துக்கு வந்தது- தேவைப்பட்டால் ஒரு கதையை பஸ் டிக்கெட் பின்புறம் கூட எழுதலாம்.

No comments:

Post a Comment