Monday, January 16, 2012

சென்னை புத்தகக் காட்சி


இன்னும் இரண்டு நாளே என்று உணர்ந்து, முதல் நாள் சுரத்தை மறந்து, இன்றைய லேசான காய்ச்சலை மறைத்து , மனைவி முறைத்ததை தவிர்த்து,  முறைத்த பின்னும், நூல்களின் மேல் கொண்ட தீராத தாகத்தால் , நேற்று சென்னையில் நடக்கும் 35வது புத்தகக் காட்சிக்கு போனேன் - இப்படியெல்லாம் சொன்னால் எனக்குப் பிடித்த ஆசிரியர் சுஜாதா, திட்டுவார்- எப்படி ? இதெல்லாம் உடான்சு என்று ! நிஜமேன்னவோ, இந்த முறை ஏதாவது சில நூலாசிரியர்களைப் பார்ப்போமா என்ற ஆவல். ஆனால் புத்தகத்தை விடபுத்தகக் காட்சி மேல் கண்டிப்பாக ஒரு மோகம் உண்டு. இல்லையென்றால் டிசெம்பர் மாதத்தில் இருந்தே twitteரிலும், facebookகிலும் சென்னை காட்சி  எப்பொழுது எப்பொழுது  என்று பல முறை நச்சரிதிருக்க மாட்டேன்- யாரும் பதில் சொல்லை வில்லை என்பதெல்லாம் இப்ப தேவையில்லாத விஷயம்

கண்டிப்பாக இதை ஒரு மோகமாகத்தான் வளர்த்துக் கொண்டிருக்கிறேன் . இல்லையென்றால் ஆறாவது புத்தகக்  காட்சியில் இருந்து , கிட்டத்தட்ட "1979' ல் இருந்து போய்க்கொண்டிருக்கிறேன். அப்பெல்லாம் அண்ணா சாலையில் , ஸ்பென்சர் எதிரில் உள்ள  ஆர்ட்ஸ் காலேஜ்  மைதானத்தில் நடக்கும். நண்பர்கள் பட்டாளத்துடன் முதலில் ஒரு முன்னோட்டம்,  சில புத்தகங்களை தேர்வு  செய்து விட்டு , அடுத்த முறை அவைகள் இருந்தால், அதற்கான சில்லறையை தேத்த முடிந்தால், வாங்கி விடுவேன். திரும்பி திரும்பி அணுகி , நன்று முடிப்பது தானே அணுகுமுறைதெரிந்தவர்கள்  கொஞ்சம் சொல்லுங்கள் - அந்தக் காலத்தில் இதெல்லாம் அவ்வளவு பத்தாது , எங்களுக்கு. எதோ சினிமாவோட சரி

சரி விஷயத்துக்கு வருவோம் . எதிர்பார்த்த அளவு கொஞ்சம் கூட்டம் அதிகம், ஆனால் சமாளிக்க முடியாதபடி அல்ல. சுமார் மூன்று மணி நேரத்தில் எல்லா ஸ்டாலையும் ஓரளவு பார்க்க முடிந்தது. ஏகப்பட்ட  தமிழ்ப் புத்தகங்கள் , நிறைய கணினி சமாச்சாரங்கள், ரொம்ப நாளாக கடையில் மட்டுமே பார்த்துக்  கொண்டிருக்கின்ற கண்ணதாசனின் "அர்த்தமுள்ள இந்து மதம் " பத்து பாகங்களும் கொண்ட ஒரே புத்தகம் கிடைத்தது - சந்தோஷமாக வாங்கினேன்நிறைய ஸ்டால்களில் பிரதானமாக "சுஜாதா புத்தகங்கள் கிடைக்கும்" என்ற போர்டுகள் தொங்கின . காஞ்சிபுரம் ஸ்டால் காற்று வாங்க கேண்டின் நிரம்பி வழிந்தது- இன்னும் விலைப் பட்டியல் பார்க்கலை போல . வாங்குகிற புத்தகங்களை நிதானமாக அசை போட்டு சுவைத்து செரிக்கலாம், ஆனால் கேண்டின் விஷயத்தில் விலையினால் செரிமான  பிரச்சினை  இருக்கும் என்று தோணுது. 

சோவின் "இந்து மகா சமுத்திரம்" - ரொம்ப நாட்களாகத தேடியது கிடைத்தது. என்னுடன் வந்தவர்கள் சில ரமணரின் புத்தகங்கள் , சில கிரிக்கெட் சமாச்சாரங்கள் என்று மணிக்கணக்கில் சுத்தியத்தில் வயிறு பசித்தது, கால் வலித்தது ஆனால் மனசு மட்டு சந்தோஷமாய் இருந்தது . எதிர்பார்த்தபடியே சில பல பிரபங்களையும் பார்க்க முடிந்தது. ஞானி அவர்கள், மனுஷ்ய புத்திரன் , ஒரு தென் சென்னை அரசியல் தலைவர் குடும்பத்துடன், நடிகரிலிருந்து ஒரு அப்பாவாக டக்கராக ப்ரமோஷன் ஆன "சித்ரா லக்ஷ்மணன் " அவர்கள், மற்றும் சிலர் ஆனால் பெயர் தெரியவில்லை. 

 ஆனால் எதோ நெருடியது - கூடை கூடையை கொட்டிக் கிடக்கும் ஆங்கிலப் புத்தகங்கள் எங்கேStephen Covey புத்தகமே எங்கு தேடியும் கிடைக்கவில்லை !   சென்னை மக்களின் தமிழ் தாகம் நன்றாகத்தான் இருக்கு , ஆனால் அதற்காக ஆங்கிலத்தை விட முடியுமா

ஒன்று மட்டும் புரியவில்லை. புத்தகங்களுக்குப் போட்டியாக எங்கு பார்த்தாலும் ஒரே துண்டுப் பிரசுரங்கள். இது தேவையா. நுழையும் போதே கண்டிப்பாக எதையோ திணிக்க , இலவசமாகக் கிடைக்கும் எதையுமே வேண்டாம் என்றே சொல்லத் தெரியாத நாமோ வாங்கிப் படித்து விட்டு அதை அப்படியே போட, சென்னை மாநகராட்சி புது துப்புரவாளர்கள் வேற இப்பத்தான் மலையாய் குவிந்த குப்பைகளை அகற்றிக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் எப்பொழுது வருவார்களோ என்ற கவலையில் நாம் மலைக்க, ஒரே குழப்பம். ஒரு சின்ன ஆலோசனை , ஏன் இந்தத் துண்டுப் பிரசுரங்களை எல்லாம் ஒரு இடத்தில் வைத்து, தேவைப்பட்டவர்கள் மட்டும், அதை எடுத்தால் இந்தக் குப்பையை  தவிர்க்கலாமே ?  நம்   நாட்டில் ஆலோசனை தான் இலவசமாக கொடுக்க முடியும். எதோ என் பங்குக்கு ஒன்று கொடுத்துருக்கேன் . மற்றபடி புத்தகக் கண்காட்சி என்னவோ வழக்கம் போல நன்றாகத்தான் இருந்தது. .

மார்கழி மாதத்தை ஒட்டி வரும் இன்னும் ஒரு நல்ல சமாச்சாரம் இந்தக் கண்காட்சி. மனம் இப்பவே அடுத்த டிசம்பருக்கு  ஏங்குது - அதுவரைக்கும் வாங்கியவற்றை படிப்போம் 


6 comments:

  1. Presentation books a fair description. Gives me a feeling, as if I myself went there

    ReplyDelete
  2. Gives me a feeling as if I myself went to the fair

    ReplyDelete
  3. On 17-Jan-2012, Sudha Sundararaman wrote " ROmba nalla irukku Kapali.. Hats off!!
    Idu madiri time kidaithu naambalum ezhuda maatoma endru manasu enguhiradu!!"

    ReplyDelete
  4. On 17-Jan-2012, murugan ramanathan wrote " Your post was really interesting. I visited the fair last year and the format doesn't seem to have changed much but new books must have been there too though you haven't mentioned anything. Innum arthamulla indu madam and indu maha samudhram thana?

    I have also observed that though it's nice to see more and more books in Tamil, we should not ignore English books, they are so much a part of our lives!

    Why don't you teach me to write in Tamil ( on the computer, of course!!).It is really nice to read the post in Tamil."

    ReplyDelete
  5. On 18-Jan-2012, KV Chandran wrote " Thank you very much for the thought provoking,inspiring and wonderful article. Kindly accept my appreciation."

    ReplyDelete