Saturday, January 28, 2012

நம் தமிழ்


கொஞ்ச நாட்களாக தமிழ் படும் பாட்டை நினைத்தால் ரொம்ப வருத்தமா இருக்கு
ஒரு பக்கம் உண்மையாகவே தமிழின் மேல் உள்ள பற்றை வெளிப் படுத்துகின்றோம்
மாநாடு நடத்துகின்றோம், செம்மொழியாக்குகின்றோம்
அரசாங்க பரிவர்த்தனைகள் கூடிய மட்டும் தமிழிலேயே இருக்கின்றன
கஷ்ட்டப்பட்டு IAS படித்தவர்களும் தமிழிலேயே கையெழுத்துப் போடுகிறார்கள்  

ஆனால் உண்மையான மாஸ் மீடியாவான தொலை காட்சியில் பல  நிகழ்ச்சிகள் தமிழுக்கு வில்லனாகி விட்டன
செய்தி படிப்பவர்கள் ''வுக்கும் ' " வுக்கும் வித்தியாசம் பார்ப்பதில்லை.
தமிழில் ராமாயணத்தையும் , மகா பாரதத்தையும் உபாசிப்பவர்களும் இதற்கு விலக்கல்ல .இளைஞர்களை கவர்ந்து கொள்ளும் சினிமா கதா நாயகிகளும் , ஒரு குற்ற உணர்வே இல்லாமல் தமிழை தீவிரமாக கொல்கிறார்கள்  

என் இப்படி? கோடி கோடியாக  சம்பாதிப்பதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டும் பிற மொழிகளை கற்கிறார்கள் . தப்பில்லை- சம்பாதிப்பது அவரவர் உரிமை
ஆனால் அந்த அக்கறையை நம் தாய் மொழி என்று பெருமை பட்டுக் கொள்ளும் தமிழுக்கு கொஞ்சம் காட்டலாமே !
என்ன கொடுமை என்றால் உலகில் தமிழர்களுக்கு எந்த மூலையில் கொடுமை  நடந்தாலும் கொடி பிடிக்கும் இந்த அன்பர்களுக்கு, நம் மொழி தெரியவுமில்லை, தெரிந்து கொள்ள ஆர்வமுமில்லை 

சரி என்னதான்  செய்யலாம் என்கிறீர்களா ?
தமிழ் தமிழ் என்று  மூச்சுக்கு  மூச்சு பேசும் அரசாங்க தொலை காட்சி , சரியாக தமிழை உச்சரிக்காதவர்களுக்கு, வேலை கொடுக்காதீர்கள் . போய் சரியாக கற்றுக் கொண்டபின் வரச் சொல்லவும்.  

இதே போல்தான் உபன்யாசகர்களுக்கும். என்னை பொறுத்த வரை இவர்களுக்கு இன்னும் கவனம் தேவை. காசை மீறிச் செய்யும் வேலை இவர்களுக்கு, அதனால் , அதிக பொறுப்பு இருக்கிறது.

தமிழ்ப் படங்களில் தமிழை சரியாக உச்சரிக்கத் தெரியாத, முக்கியமாக தமிழ் நாட்டில் பிறந்த கதாநாயகன், கதாநாயகிகளுக்கு சந்தர்ப்பம் அளிக்க வேண்டாம். ரசிகர்களும் அவர்கள் படங்களை புறக்கணிக்கணும். நூறு ரூபாய் கொடுத்து முண்டி அடித்து டிக்கட் வாங்கி தமிழ்ப் படம் பார்க்க செல்லும் ஒரு ரசிகனின் இந்த எதிர்பார்ப்பு தப்பா?

நான் தமிழ் ஆர்வலனோ அல்லது வம்பு வளர்க்க நினைக்கும் விமர்சகனோ அல்ல

இதை கவனிக்காமல் விட்டு விட்டால் , இதே வேகத்தில் போனால் , இந்த வேகமான யுகத்தில் ' தமிழ் மெல்லச் சாகாது'. சீக்கிரமே சாகும்.

இந்த ஆதங்கம் தான் என்னை இதை எழுதத் தூண்டியது 


3 comments:

  1. அருமையான பதிவு. எனக்கு இன்றும் சிறுவயதில் கற்ற "ஆரல்வாய்மொழி கோட்டை வாசலிலே நாழி முழக்கு உழக்கு ஆழாக்கு நெல்லுக்கு ஏழு வாழைப்பழம்" தான் தமிழ் என்றவுடன் நினைவுக்கு வருகிறது

    ReplyDelete
  2. I got interested in Mathematics due to a brilliant teacher I had in my 9th standard. I got interested in Tamil due to Mr T Srinivasan, Tamil teacher in B.Sc classes. His passion was huge and I still remember his class on "Panjali Sabadam". "Idhu poruppadillai thambi - eri thazhal kondu vaa; kadhirai vaithu izhandaan, annan kaiyai erithiduvom" he would bring Bheema to life in the class with that poem. Can the current day students recall their Tamil teacher? If at all, they would be remembered for driving a insipid, politically motivated text into the brains of children or drilling them in "kutriyalukaram" or some such grammer point. In my opinion Tamil in Tamil nadu began to die when it was used by a political party to drive its personal agenda. They removed Bharathi from the text books. Many of the elders even today could recite Bharathiar's songs - they identified Tamil with those songs - I still remember Panjali Sabadam verbatim thanks to T Srinivasan (he also used to teach without referring to the book). The way to save Tamil is to have good teachers in schools who are passionate but not fanatical about Tamil. Well, that is true for developing any subject, correct?

    ReplyDelete
  3. Very true, Murali. More impressive & eloquent a teacher is, it is more likely that the students are bound to be attracted. It is not that there are no dedicated teachers now, but the students are also getting distracted and are at a juncture wondering which to prioritize! More details on the illustrious scholars we had, some more support, I am sure the old style and trend will be on the resumption mode. Thanks for your thoughts

    ReplyDelete