- இன்னிக்கு எந்த ஹோம் ஓர்க்கும் குடுக்கக் கூடாது
- எப்படியாவது இன்னிக்கு ஒரு நாளாவது ஆபீசுக்கு நேரத்துல போகணும்
- இன்னிக்காவது ஆன் சைட் ஆள் கிட்ட திட்டு வாங்கக் கூடாது
- இந்த ஞாயிற்று கிழமையாவது காலையில் என் மனைவி காபி போடணும்
- போன வருஷம் பிறந்த பையனுக்கு , அடுத்த வருஷம் ப்ரீ ஸ்கூல்ல இடம் கிடைக்கணும்
- எப்படியாவது ரேஷனில் பாமா யில் கிடைக்கணும்
- இந்த லீவுக்காவது மனைவிக்கு அவ அம்மா வீட்டுக்கு போறதுக்கு ரயில்ல பெர்த் கிடைக்கணும் - ரிடர்ன் டிக்கெட் பத்தி பரவாயில்லை
- இன்னும் ரெண்டு நாள் லீவு , அதுக்கு முன்னாடி மானேஜர் கண்ணுல படக் கூடாது
- எப்படியாவது எனக்கு காம்பஸ் இன்ட்டர்வ்யுவில் வேலை கிடைக்கணும்
- எப்படியாவது அசோசியேஷன் மீடிங்க்லேந்து தப்பிச்சு போஸ்ட் எடுத்துக்காம இருக்கணும்
ஆண்டவா- இப்படி நான் உன்னிடம் நாளுக்கு நாள் எத்தனையோ வேண்டுதல்களை வைத்திருக்கிறேன் .
அப்படியே
இந்தியாவின் மானத்தையும் எப்படியாவது காப்பாற்று
எப்படித் தோற்றாலும் எவ்வளவு முறை தோற்றாலும், நம் இந்திய வீரர்கள் சிரித்துக் கொண்டே இருக்கிறார்கள் . அவர்களுக்கு அந்த ஆர்வத்தை எப்பொழுதும் கொடு
கடைசியாக , எங்களைப் போன்ற பாமர ரசிகர்களுக்கும் நல்ல மன வலிமையையும், எப்பொழுதும் மேட்ச் பார்ப்பதற்கு மின்சாரமும், தேவைப் பட்ட அளவுக்கு ஸ்கூல், காலேஜ் , ஆபீசுக்கு லீவும் குடு.
இதுதான் , அப்பாவி இந்திய கிரிகெட் ரசிகனின் வேண்டுதல்
- நியாயம்தானே ?
Hahaha well written uncle. In fact even I do wake up at 5.30 to watch thz match. Enna panradhu sachin kaaga idhellam paaka vendirkku :P :)
ReplyDeleteநம்மைப் போல கிரிக்கெட் கிறுக்கர்கள் பலர் - அவர்களுக்காகத்தான் இந்த மண் சோறு
ReplyDeleteI am not a fan like you, still I pray like you in the interest of our NATION's Honour.
ReplyDeleteIndha venduthalkalle niraiya palaperu manassile irukku.
On 24-Jan-2012, NATARAJAN SV wrote "very nice..
ReplyDeletecongrats..
almost all are covered..
keep it up.."
On 12-Feb-2012 mantrala lavanya wrote "Practical one, especially for cricket lovers... I feel the passion in your writings!!
ReplyDeleteNo words to express, when i read the blogs, it keeps my mind fresh..
Thanks for the wonderful sharing, please do keep going."